என் மலர்tooltip icon

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் 19.2.2026: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்
    X

    இன்றைய ராசிபலன் 19.2.2026: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரச்சனை தீர பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக உயர்வு உண்டு.

    ரிஷபம்

    யோகமான நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்ய முன்வருவீர்கள்.

    மிதுனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதை புலப்படும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் வழங்குவர்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். கடன் சுமை கூடும். சொத்துகள் வாங்கும்போது கவனம் தேவை.

    சிம்மம்

    நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நாள். நிம்மதி குறையும். வரவை காட்டிலும் செலவு கூடும். நண்பர்களால் தொல்லை உண்டு. பயணங்களில் இடையூறு ஏற்படலாம்.

    கன்னி

    விரயத்திற்கேற்ற லாபம் வந்து சேரும் நாள். இடம் வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது நல்லது.

    துலாம்

    களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஊர்மாற்ற சிந்தனைகள் உருவாகும்.

    விருச்சிகம்

    பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    தனுசு

    சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். மருத்துவ செலவுகள் உண்டு.

    மகரம்

    கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். உடன் இருப்பவர்களிடம் கொடுத்த பணி சிறப்பாக நடைபெறும்.

    கும்பம்

    நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெறும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

    மீனம்

    முக்கிய பிரமுகர்களால் முன்னேற்றம் கூடும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் நேர்முக தேர்வில் வெற்றி கிட்டும்.

    Next Story
    ×