என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-17.08.25
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். திருமணப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
ரிஷபம்
அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம், பூமி சேர்க்கை உண்டு. கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
மிதுனம்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
அன்றாட பணிகளில் இருந்த தடை அகலும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் பங்குதாரர்களால் நன்மை ஏற்படும்.
சிம்மம்
யோகமான நாள். மறதியால் விட்டுப்போன பணி ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.
கன்னி
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. உறவினர் பகை உருவாகும்.
விருச்சிகம்
வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் மும்முரம் காட்டுவீர்கள்.
மகரம்
நன்மைகள் நடைபெறும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதம் நிறைவேறும்.
கும்பம்
அலைபேசி மூலம் அனுகூலச் செய்தி வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மீனம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க நேரிடும்.






