என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan | இன்றைய ராசிபலன் 16.3.2026: இவர்களுக்கு எதிலும் கவனம் தேவை
    X

    Today Rasipalan | இன்றைய ராசிபலன் 16.3.2026: இவர்களுக்கு எதிலும் கவனம் தேவை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மனக்குழப்பம் அகலும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது.

    ரிஷபம்

    பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொழில் ரீதியாக பங்குதாரர்களோடு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

    மிதுனம்

    ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். முக்கிய வேலைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும். உத்தியோகத்தில் தேவையில்லாத வீண்பழிகள் ஏற்படலாம்.

    கடகம்

    விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு குறையும்.

    சிம்மம்

    இனிமையான நாள். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் விலகிய கூட்டாளிகள் விரும்பி வந்திணைவர். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    கன்னி

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் உண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

    துலாம்

    நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சிகம்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நண்பர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    எதிலும் கவனம் தேவைப்படும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மனக்கலக்கம் அகலும்.

    மகரம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். பழைய ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை பத்திரமாகக் கையாளவும்.

    கும்பம்

    பாசம் காட்டியவர்களின் நேசம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொந்த பந்தங்களுக்காக செலவு செய்ய முன்வருவீர்கள்.

    மீனம்

    பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    Next Story
    ×