என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 9.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு நிதிநிலை உயரும் நாள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பிரியமானவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நட்புவட்டம் விரிவடையும்.
மிதுனம்
தட்டுப்பாடுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி பெற நண்பர்கள் உதவி செய்வர். நிலம், பூமி வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்
நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும்.
சிம்மம்
கவலைகள் அகலும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். தொழிலில் இருந்த சரிவு நிலைமாறும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
கன்னி
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வருங்கால நலன்கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவு எடுப்பீர்கள். வாகனப் பழுதுச் செலவுகள் உண்டு.
துலாம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். எந்தக் காரியத்தையும் எடுத்தோம். முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
நிதிநிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அலைபேசி வழிச் செய்தி ஆச்சரியப்பட வைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
தனுசு
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். கூட இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மகரம்
வாங்கிய கடனைச் செலுத்தி மகிழும் நாள். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பேச்சாற்றல் மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர்.
கும்பம்
நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை ஏற்படும் நாள். எதிரிகளின் தொல்லைகளைச் சமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
மீனம்
தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தடையாக இருந்த காரியம் ஒன்று துரிதமாக நடைபெறும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல்நலம் சீராகும்.






