என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.1.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றி ஏற்படும் நாள்
    X

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.1.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றி ஏற்படும் நாள்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தனவரவு திருப்தி தரும் நாள். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    வாங்கல், கொடுக்கல்களில் வளர்ச்சி கூடும் நாள். ஆதாயம் உண்டு. வாழ்க்கைத்தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்கள் உண்டு. கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    கடகம்

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

    சிம்மம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வாகனத்தை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    துலாம்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    தனுசு

    திடீர் வரவு ஏற்பட்டு திகைப்படைவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மகரம்

    யோகமான நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்துமுடிப்பீர்கள். செல்வந்தர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வழிபிறக்கும்.

    கும்பம்

    முன்னேற்றம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு.

    மீனம்

    பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் ஏற்படும்.

    Next Story
    ×