டென்னிஸ்

சானியா மிர்சா

விம்பிள்டன் - கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2022-07-05 17:54 GMT   |   Update On 2022-07-05 17:54 GMT
  • சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
  • விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, ஜான் பீர்ஸ் - கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Tags:    

Similar News