டென்னிஸ்

நிகோலஸ் ஜாரி

ஜெனீவா ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் நிகோலஸ் ஜாரி

Update: 2023-05-27 15:50 GMT
  • ஜெனீவா ஓபன் டென்னிசில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் ஜாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா:

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி, பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ் ஆகியோர் மோதினர்.

இதில் அதிரடியாக ஆடிய நிகோலஸ் ஜாரி 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

நிகோலஸ் ஜாரி அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News