உலகம்
கூகுள் மேப்

ரஷிய படைகளுக்கு உதவாமல் இருக்க உக்ரைனில் கூகுள் மேப் சேவையை நிறுத்திய கூகுள் நிறுவனம்

Published On 2022-02-28 11:28 IST   |   Update On 2022-02-28 11:28:00 IST
ரஷ்யாவில் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்து ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
கீவ்:

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.  ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

இந்நிலையில் ரஷிய படைகள் கூகுள் மேப் உதவியுடன் வழிதடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்துகொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் அரசிடம் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷிய தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஓரளவு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Similar News