தொழில்நுட்பச் செய்திகள்
ட்ரூக் பட்ஸ் F1

ரூ. 899 விலையில் புது இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-05-26 05:24 GMT
ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேர பிளேடைம் வழங்குகிறது.

இந்திய சந்தையில் முன்னணி ஆட்யோ சாதனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ட்ரூக் நிறுவனம் புதிய F1 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ட்ரூக் நிறுவனம் ட்ரூக் பட்ஸ் S2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ட்ரூக் F1 இயர்பட்ஸ் மாடல் ப்ரோடெக்டிவ் கேஸ் மற்றும் சப்டைல் டிஜிட்டல் பேட்டரி ரீட்-அவுட் உள்ளது. இத்துடன் இன்ஸ்டண்ட் பேரிங், அதிவேக கனெக்டிவிட்டி வழங்கும் ப்ளூடூத் 5.3,, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-இல் கேமிங் செய்வதற்கென பிரத்யேக மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. மேலும் இதில் டேப் டு கண்ட்ரோல் மற்றும் ஹை பெடிலிட்டி ஆடியோ மற்றும் AAC கோடெக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ட்ரூக் F1 இயர்பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. 

இந்தியாவில் புதிய ட்ரூக் பட்ஸ் F1 இயர்பட்ஸ் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 1,299 என மாறி விடும்.  
Tags:    

Similar News