தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3

தலைசிறந்த கேமரா, அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் கேலக்ஸி Z போல்டு 4

Published On 2022-05-18 04:12 GMT   |   Update On 2022-05-18 04:12 GMT
சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 மாடல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கி இருப்பதை போன்ற லென்ஸ் தான் புது கேலக்ஸி Z போல்டு 4 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இது குறித்து டிப்ஸ்டரான ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



இத்துடன் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் டிஸ்ப்ளே, கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிக ரெசல்யூஷன்  கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. 

கடந்த மாதம் வெளியான தகவல்களில் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 10MP டெலிபோட்டோ கேமரா, 3X ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. இதுதவிர 108MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதே போன்று வெளியான மற்றொரு தகவலில் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனில் S பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. 
Tags:    

Similar News