தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் கேலக்ஸி M12

விரைவில் இந்தியா வரும் குறைந்த விலை சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2022-05-16 04:30 GMT   |   Update On 2022-05-16 04:30 GMT
சாம்சங் அறிமுகம் செய்த ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கேலக்ஸி M13 5ஜி மாடல் விவரங்கள் ப்ளூடூத் சான்றளிக்கும் வலைதளம் மற்றும் பல்வேறு இதர வலைதளங்களில் வெளியாகி இருந்தது. 

இந்த வரிசையில், கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் FCC வலைதளத்தில் புதிய சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடலின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. FCC வலைதள விவரங்களின் படி புது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் SM-M135M எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலில் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனுடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.0, 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது டெப்த் கேமரா, 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News