தொழில்நுட்பச் செய்திகள்
ஸ்டார்லின்க்

32 நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை - எலான் மஸ்க் அதிரடி

Published On 2022-05-15 04:15 GMT   |   Update On 2022-05-14 11:52 GMT
எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் நிறுவனம் உலகம் முழுக்க 32 நாடுகளில் இணைய சேவை வழங்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான, ஸ்டார்லின்க் தற்போது 32-க்கும் அதிக நாடுகளில் கிடைப்பதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஸ்டார்லின்க் வலைதளத்தில் எந்தெந்த நாடுகளில் இணைய சேவை தற்போது கிடைக்கிறது (Available) என்றும், எங்கு இந்த இணைய சேவையை பெற காத்திருக்க வேண்டும் (Waitlist) என்றும் எங்கு விரைவில் (Coming Soon) வழங்கப்பட இருக்கின்றன என்ற விவரங்களை வெளியிட்டு உள்ளது. 



அதன்படி முதற்கட்டமாக ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படும் நாடுகள் பட்டியலில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் Availabale பிரிவில் இடம்பெற்று உள்ளன. இங்கு ஸ்டார்லின்க் சேவையை உடனடியாக பயன்படுத்த முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஆப்ரிக்கா, தென்மேற்கு அமெரிக்க நாடுகளில் விரைவில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது.

இதை அடுத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை Coming Soon பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல்  ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக உலகம் முழுக்க 32 நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது. இதை அடுத்து இந்தியா போன்ற நாடுகளிலும் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படலாம்.
Tags:    

Similar News