தொழில்நுட்பச் செய்திகள்
கோப்புப்படம்

இந்திய டெலிகாம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 116 கோடியாக அதிகரிப்பு

Published On 2022-05-14 06:54 GMT   |   Update On 2022-05-14 06:54 GMT
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டெலிகாம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை பற்றிய புது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.


மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய டெலிகாம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11.6 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டிராய் (மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.2 கோடியும், வயர்லைன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 24 கோடியாகவும் இருக்கிறது.

வயர்லெஸ் சந்தாதாரர்கள் வளர்ச்சி 0.05 சதவீதமும், வயர்லைன் சந்தாதாரர்கள் வளர்ச்சி 1.31 சதவீதமும் பதிவாகி உள்ளது. டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் சேர்த்துள்ளன. இரு நிறுவனங்களும் வயர்லெஸ் மற்றும் வயர்லைன் பிரிவுகளில் புது வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளன. 



இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பிப்ரவரி மாத வாக்கில் 1,66.05 மில்லியனில் இருந்து மார்ச் மாதத்தில் 1,166.93 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது. இதில் நகர பகுதிகளில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை 64.77 கோடியில் இருந்து 64.71 கோடியாக சரிந்துள்ளது. ஊரக பகுதிகளில் டெலிகாம் பயனர்கள் எண்ணிக்கை 51.82 கோடியில் இருந்து 51.98 கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.2 கோடியில் இருந்து 114.15 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பங்கும் உள்ளடக்கியது ஆகும். ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாதத்தில் 22.55 லட்சம் புது பயனர்களையும், ஜியோ நிறுவனம் 12.6 லட்சம் புது பயனர்களையும் எட்டியுள்ளது. 

வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 28.18 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் முறையே 1.27 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 101 பயனர்களை இழந்துள்ளன. 
Tags:    

Similar News