தொழில்நுட்பச் செய்திகள்
ஆண்ட்ராய்டு 13

ஒன்பிளஸ், ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வெளியீடு - உங்க போன் இருக்கானு பாருங்க!

Published On 2022-05-12 08:41 GMT   |   Update On 2022-05-12 08:41 GMT
ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் உங்களின் மாடலும் இடம்பெற்றுள்ளதா என பாருங்கள்.


ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவற்றில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கஸ்டம் ஓ.எஸ். ஸ்கின் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். பெறும் முதற்கட்ட ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ரியல்மி GT 2 ப்ரோ இருக்கின்றன. ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவதை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனை பயனர்கள் ஒன்பிளஸ் ஃபோரம் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். 



இது முதற்கட்ட பீட்டா வெர்ஷன் என்பதால் மிக முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ்.- முதற்கட்டமாக ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சோதனை செய்யப்பட இருக்கிறது. வரும் மாதங்களில் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 13 ஸ்கின் வெளியிடப்படும்.

ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் முதற்கட்ட பீட்டா வெர்ஷன் ஆகும். ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். சார்ந்த ரியல்மி யு.ஐ. 4 ஸ்கின் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. ரியல்மி GT 2 ப்ரோ மாடலை தொடர்ந்து ரியல்மி GT, ரியல்மி GT நியோ 3, ரிய்மி 9 ப்ரோ பிளஸ் மற்றும் பல்வேறு இதர மாடல்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News