தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

விரைவில் இந்தியா வரும் சாம்சங் போல்டபில் சாதனங்கள்

Published On 2022-05-09 09:03 GMT   |   Update On 2022-05-09 09:03 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய வெளியீட்டை உணர்த்தும் தகவல்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4, கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 மாடல்களின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதில் புதிய சாதனங்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

எனினும், முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் EB-BF936ABY மற்றும் EB-BF937ABY மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் பேட்டரிகள் EB-BF721ABY and EB-BR722ABY மாடல் நம்பர்களை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவை தவிர புது சாதனங்கள் பற்றி வேறு எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 108MP பிரைமரி கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிக ரெசல்யூஷன் கொண்ட மேம்பட்ட அண்டர்-டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News