தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோ

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ஜியோ சலுகைகள் அறிவிப்பு - விலை இவ்வளவு தானா?

Published On 2022-05-06 06:10 GMT   |   Update On 2022-05-06 07:08 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா  வழங்கும் சலுகைகளை ஜியோ அறிவித்து இருக்கிறது.



புது சலுகை விலை மற்றும் பலன்கள்:

- ரூ. 151 டேட்டா ஆட் ஆன் சலுகை - தினமும் 8GB டேட்டா, ஆக்டிவ் பிளான் நிறைவுபெறும் வரை வேலிடிட்டி

- ரூ. 33 ஒரு மாத சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி

- ரூ. 583 - இரண்டு மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி

- ரூ. 783 - மூன்று மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி
 
ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதங்களுக்கான சலுகைகளை தேர்வு செய்வோர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா பலன்களை மூன்று மாதங்களுக்கும் தொடர்ச்சியாக பெற, ஏதேனும் சலுகையில் ரிசார்ஜ் செய்து அக்கவுண்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். 

புதிய பிரீபெயிட் சலுகை விவரங்கள் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி லமற்றும் அனைத்து செக் பாயிண்ட்களிலும் கிடைக்கிறது. 
Tags:    

Similar News