தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

இணையத்தில் லீக் ஆன ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 புது தகவல்

Published On 2022-05-03 06:28 GMT   |   Update On 2022-05-03 06:28 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 8 மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து புதிய வாட்ச் மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக மார்க் குர்மான் வெளியிட்ட தகவல்களில் புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் உடல் வெப்பநிலையை கண்டறியும் சென்சார் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது மிங் சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் தனது புதிய வாட்ச் மாடலில் உடல் வெப்பநிலையை கண்டறியும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.



இந்த வசதியை முந்தைய ஆப்பிள் வாட்ச் 7 மாடலிலேயே வழங்க ஆப்பிள் முயற்சி செய்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் இதனை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த ஆண்டு அறிமுகமாகும் வாட்ச் மாடலில் இந்த அம்சம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

புதிய அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களால் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 கொண்டு உடலின் வெப்ப நிலையை கண்டறிந்து கொள்ள முடியும். இது தெர்மோமீட்டர் போன்று செயல்பட்டு பயனருக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை தெரிவிக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபோன் 14 வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். 

Tags:    

Similar News