தொழில்நுட்பச் செய்திகள்
சீயாட்டில் NFT அருங்காட்சியகம்

உலகின் முதல் NFT அருங்காட்சியகம் திறப்பு - எங்கு, எதற்கு தெரியுமா?

Published On 2022-05-02 06:02 GMT   |   Update On 2022-05-02 06:02 GMT
அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் உலகின் முதல் NFT அருங்காட்சியகம் திறக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய விவரங்களை பார்ப்போம்.

உலகின் முதல் நிரந்தர NFT அருங்காட்சியகம் சீயாட்டில் நகரில் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிளாக்செயின் சார்ந்த டிஜிட்டல் ஆர்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. NFT-க்கள் ஒரு வகையான டிஜிட்டல் சொத்து ஆகும். சமீப காலங்களில் இவை மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. NFT-க்கள் பிளாக்செயினில் (நெட்வொர்க்டு கம்ப்யூட்டர்களில் வைக்கப்பட்ட பரிவரத்தனைகள்) இடம்பெற்றுள்ளன. 

இந்த அருங்காட்சியகம் ஜனவரி 14 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஆர்டிஸ்ட், கிரியேட்டர்கள் மற்றும் கலெக்டர்கள் தங்களின் NFT-க்களை காட்சிப்படுத்த வழி செய்கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் வெளி உலகிற்கு டிஜிட்டல் ஆர்ட் பற்றிய புது சந்தையை அறிமுகம் செய்து, அதுபற்றிய தகவல்களை விளக்க முடியும். 



உள்ளூர் டிஜிட்டல் ஆர்டிஸ்ட் மாக்சிம் சர்குய் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, ஏப்ரல் 16 ஆம் தேதி பருவநிலை மாற்றம் தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியை துவக்கி வைத்தார். இவரின் டிசைன்கள் ஆன்லைனில் NFT-க்களாக விற்பனை செய்யப்படுகிரன்றன. மேலும் இவற்றை அச்சடிக்கப்பட்டும் வழங்கப்படுகின்றன. 

"முன்னதாக டிஜிட்டல் கலை படைப்பு அல்லது சாதாரண கலை படைப்புகளை யார் பார்க்க வேண்டும் என்றும், எப்படி அதனை வாங்க வேண்டும் என்ற விவகாரங்களில் அதிக கட்டுப்பாடுகள் இருந்தன," என்றும் சர்குய் தெரிவித்தார். இவர் சீயாட்டில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி கிரிப்டோ சார்ந்த கலைத் துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நுழைந்தார்.

கடந்த மாதம் ஐயர்லாந்தை சேர்ந்த ஆய்வு மற்றும் சந்தை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, சர்வதேச NFT சந்தை இந்த ஆண்டில் மட்டும் 21 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 698 கோடி) மதிப்பை எட்டும் என கணித்துள்ளது. 

Tags:    

Similar News