தொழில்நுட்பச் செய்திகள்
ஒப்போ ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இத்தனை விஷயங்கள் இருக்கா? ஒப்போ வெளியிட்ட புது தகவல்

Published On 2022-05-02 04:18 GMT   |   Update On 2022-05-02 04:18 GMT
ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியின் போது எதிர்கொள்ளும் வழிமுறைகளை அந்நிறுவனம் விரிவாக விளக்கி இருக்கிறது.


ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியின் போது எந்தளவு பரிசோதனைகளை எதிர்கொள்கின்றன என்பதை விரிவாக விவரித்து இருக்கிறது. நுகர்வோர் விசுவாசத்தை வெளிப்படுத்த சிறந்த வழிமுறை உயர் ரக பொருட்களை உற்பத்தி செய்வது தான் என ஒப்போ நிறுவனம் அறிவித்து உள்ளது. 

இதன் காரணமாக ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியின் அனைத்து பிரிவுகளிலும் மிக கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் ஒப்போ நிறுவனம் இந்தியாவில் QE ரிலயபிலிட்டி ஆய்வகத்தை திறந்தது. 



தொடர்ச்சியான ஆய்வு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி மூலம் மிக எளிமையான யோசனைகள் பிறக்கும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்‌ஷிப் மாடல்களான ஒப்போ F21 ப்ரோ உள்ளிட்டவை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மணி நேர மனித உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டன. 

இதனை எப்படி உற்பத்தி செய்வது என்பதை திட்டமிடவே நீண்ட காலம் ஆகிவிட்டது. ஒவ்வொரு புதிய ஒப்போ சாதனமும் இதுபோன்று பிரத்யேக வழிமுறைகளை கடந்தே உற்பத்தி நிலையை எட்டுகின்றன. மேலும் ஸ்மார்ட்போன்களின் தரம் மற்றும் உறுதியை நிலைநாட்ட பலக்கட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற பரிசோதனைகள் ஒப்போ நிறுவனத்தின் ரிலையபிலிட்டி ஆய்வகத்தில் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News