தொழில்நுட்பச் செய்திகள்
ஐகூ Z6 ப்ரோ 5ஜி

ரூ. 14 ஆயிரம் பட்ஜெட்டில் ஐகூ Z6 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்

Published On 2022-04-28 09:39 IST   |   Update On 2022-04-28 09:39:00 IST
ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ஐகூ Z6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஐகூ நிறுவனம் இந்தியாவில் ஐகூ Z6 ப்ரோ 5ஜி மற்றும் ஐகூ Z6 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஐகூ Z6 மாடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக 8GB ரேம், 4GB வரை அடிஷனல் விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 5000mAh பேட்டரி, 44w பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களும் உள்ளன. 

ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், 12GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.



புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4700mAh பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். 

விலை விவரங்கள்:

இந்தியாவில் ஐகூ Z6 44W மாடல் ராவென் பிளாக் மற்றும் லுமினா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் 6GB + 128GB மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 8GB + 128GB மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என துவங்குகிறது.

ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஃபேண்டம் டஸ்க் மற்றும் லீஜியன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், குறுகிய காலக்கட்டத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

Similar News