தொழில்நுட்பச் செய்திகள்
மைக்ரோமேக்ஸ் இன் 2C

விரைவில் இந்தியா வரும் குறைந்த விலை மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

Published On 2022-04-25 04:09 GMT   |   Update On 2022-04-25 04:09 GMT
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் 2C பெயரில் புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 

இது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மைக்ரோமேக்ஸ் இன் 2b ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C இந்தியாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதனை மைக்ரோமேக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைதளமும் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அதில் புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உள்ளன. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப், யுனிசாக் T610 பிராசஸர், 5000mAh பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.



மைக்ரோமேக்ஸ் இன் 2C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.52 இன்ச் HD+ 720x1600 பிக்சல் LCD டிஸ்ப்ளே
- யுனிசாக் T610 பிராசஸர்
- 8MP பிரைமரி கேமரா
- VGA இரண்டாவது சென்சார்
- 5MP செல்ஃபி கேமரா
- 4GB / 6GB LPDDR4x ரேம்
- 64GB eMMC 5.1  மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.
- யு.எஸ்.பி. சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக்

Tags:    

Similar News