தொழில்நுட்பச் செய்திகள்
நாய்ஸ்ஃபிட் Buzz

மிக குறைந்த விலையில் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்

Published On 2022-04-22 11:06 IST   |   Update On 2022-04-22 11:06:00 IST
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


இந்திய சந்தையில் ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் நாய்ஸ் புதிய நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. 

புதிய நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி, 1.32 இன்ச் 360x360 பிக்சல் ஃபுல் டச் ஃபிளாட் TFT LCD டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, கஸ்டமைஸ் செய்யும் வசதியுடன் கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சம் ஒன்பது ஸ்போர்ட்ஸ் மோட்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங், பெண்களின் உடல்நலனை டிராக் செய்யும் அம்சம், வாய்ஸ் அசிஸ்டண்ட் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. 



இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது, மியூசிக் அம்சத்தை இயக்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை குரல் வழியே செய்திட முடியும். இத்துடன் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஐந்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய நாய்ஸ்ஃபிட் Buzz மாடல் ஜெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Similar News