தொழில்நுட்பச் செய்திகள்
அடுத்த வாரம் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட் டி.வி.
சியோமி நிறுவனம் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஸ்மார்ட் டி.வி. மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. 5A மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் சியோமி டி.வி. 4A மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சியோமி நிறுவனம் 2019 ஆண்டு வாக்கில் சியோமி டி.வி. 4A மாடலை அறிமுகம் செய்து இருந்தது.
இதை அடுத்து Mi டி.வி. 4A ஹாரிசான் எடிஷன் மாடல் 2020 ஆண்டிலும், இதே டிவி.யின் 40 இன்ச் மாடல் கடந்த ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தான் தற்போது சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி. 5A மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய ஸ்மார்ட் டி.வி. 5A வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. டீசர்களின் படி புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. 5A மாடலில் சக்திவாய்ந்த, தலைசிறந்த ஆடியோ அனுபவம், பிரீமியம், சீம்லெஸ் ஃபினிஷ் மற்றும் A55 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் டால்பி அட்மோஸ், DTS சப்போர்ட், பேட்ச்வால் தளத்தில் மேம்படுத்தப்பட்டு அசத்தலான விவிட் பிக்சர் என்ஜின் வழங்கப்படலாம். புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. 5A மாடல்கள் விலை மற்றும் வி்ற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும்.