தொழில்நுட்பச் செய்திகள்
ட்ரூக் பட்ஸ் S2

ரூ. 1,499 விலையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2022-04-21 11:02 IST   |   Update On 2022-04-21 11:02:00 IST
இந்திய நிறுவனமான ட்ரூக் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


இந்திய சந்தையில் பிரபல ஆடியோ உற்பத்தியாளராக விளங்கும், ட்ரூக் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட S2 இயர்பட்ஸ் மாடலை சிறப்பு விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ட்ரூக் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ட்ரூக் பட்ஸ் S1 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

புதிய ட்ரூக் பட்ஸ் S2 மாடலில் பிரீமியம் ஸ்லைடிங் கேஸ், ஸ்லைடு-அண்ட்-ஷேர் தொழில்நுட்பம், 20 பிரீ-செட் EQ மோட் போன்ற அம்சங்கள் உள்ளன. இவற்றை ஸ்மார்ட் செயலி மூலம் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்கான பிளே டைம் கிடைக்கும்.



மேலும் இதில் அழைப்புகளை மேற்கொள்ள சக்திவாய்ந்த நான்கு மைக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் சிறப்பான கேமிங் அனுபவம், 55ms வரையிலான அல்ட்ரா லோ லேடென்சி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் 5.1 அம்சம் இருமடங்கு வேகமாக இணைப்புகளை சாத்தியப்படுத்துவதோடு, சீரான இணைப்பையும் உறுதி செய்கிறது.

ட்ரூக் பட்ஸ் S2 மாடல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை இந்திய சந்தையில் ரூ. 1499 எனும் சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. 

Similar News