தொழில்நுட்பச் செய்திகள்
மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

விரைவில் இந்தியா வரும் புது மைக்ரோமேக்ஸ் போன் - விலை இவ்வளவு தானா?

Published On 2022-04-19 05:54 GMT   |   Update On 2022-04-19 05:54 GMT
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் பிரிவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

இது பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன் ரெட்மி 9 சீரிஸ், டெக்னோ ஸ்பார்க் 8 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர், 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் சோதனையில் 347 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 1127 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.



புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மாரட்போன் E6533 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் பியூரோ ஆஃப் இன்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) வலைதளம் மற்றும் கூகுள் பிளே ஆதரவு கொண்ட சாதனங்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. 

முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இது டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, யுனிசாக் T610 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 64GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 மணி நேரத்திற்கான பிளேபேக் டைம் கிடைக்கும். 
Tags:    

Similar News