தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி

ஏப்ரல் 28-இல் வெளியீடு - குறைந்த விலை ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்ட ஒன்பிளஸ்

Published On 2022-04-18 04:14 GMT   |   Update On 2022-04-18 04:14 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியிட்டு உள்ளது. 

புதிய ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், 150W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த விலை உயர்ந்த மாடல் ஆகும். ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 



புதிய நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் புது டீசரில் தற்போது வெளியிட்டு இருக்கிறது. டீசரின்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தோற்றத்தில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என தெரிகிறது.

ஆனால், இந்த மாடல் பார்க்க சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10R போன்றே இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் பிளாஸ்டிக் பாடி மற்றும் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த மாடலில் அலர்ட் ஸ்லைடர், ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
Tags:    

Similar News