தொழில்நுட்பச் செய்திகள்
ஐபோன் 13

விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள ஐபோன் 13, ஐபோன் 13 மினி- வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம்!

Update: 2022-04-14 09:46 GMT
அமேசான், குரோமா, விஜய் சேல்ஸ் ஆகிய இணையதளங்களில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய போன்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் ஐபோன் 13 விலை ரூ.79,900-ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விற்பனையில் இந்த போனின் விலை கிட்டத்தட்ட ரூ.6000 குறைக்கப்பட்டு ரூ.73,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அமேசான், குரோமா, விஜய் சேல்ஸ் ஆகிய இணையதளங்களில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தவிர ஹெச்.டி.எஃப்.சி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் அல்லது உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போன் ரூ.69,900 விலையில் தொடங்குகிறது. இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.64,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குரோமாவில் இந்த போனை வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக்கும் (HDFC கார்ட்) அமேசானில் எஸ்பிஐ கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News