தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் எம்33 5ஜி

சூப்பரான அம்சங்களை கொண்ட 4 கேமராக்கள்- சாம்சங் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன்

Update: 2022-04-04 04:51 GMT
இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக், அறிமுக விலையாக ரூ.1,500 வரை தள்ளுபடி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனில் 6.6 இன்ச் full HD+ Infinity-V டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்குகிறது.

இதில் octa-core 5nm Exynos processor வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இந்த போனில் f/1.8 அப்பெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார் (120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 அப்பேர்ச்சருடன்) f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது. 

இதில் வழங்கப்பட்டுள்ள கேமராக்கள் போக்கே எஃபெக்ட், சிங்கிள் டே, ஆப்ஜெக்ட் எரேசர், வீடியோ டி.என்.ஆர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் செல்ஃபி ஷூட்டர் கேமராவும் இதில் தரப்பட்டுள்ளது.

மேலும் இந்த போனில் 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.

இந்த போனின் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகும். 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.20,499-ஆகும். இந்த இரு போன்களையும் அறிமுகம் விலையாக ரூ.17,999 மற்றும் ரூ.19,999-க்கு சாம்சங் வழங்குகிறது.

மேலும் இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படும்.
Tags:    

Similar News