தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்ஆப் புது அம்சம்

அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் வாட்ஸ்ஆப்

Published On 2022-04-03 12:00 IST   |   Update On 2022-04-02 17:18:00 IST
இதைத்தவிர வாட்ஸ்ஆப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.
உலகின் முன்னணி சேட்டிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் ஏகப்பட்ட அம்சங்களை வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி புதிய அப்டேட்டுகளை வழங்கி வ்வருகிறது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் நமக்கு சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்தவுடன் அந்த நம்பர் வாட்ஸ்ஆப்பில் இருக்கிறதா என ஆராயும். வாட்ஸ்ஆப்பில் இருந்தால் அவற்றிருக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பலாமா அல்லது கால் செய்யலாமா என கேட்கும். இதற்கு முன் சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்யும்போது கால் செய்யும் அம்சம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 

தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

இதைத்தவிர வாட்ஸ்ஆப்  ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.

Similar News