தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங்

சாம்சங் அறிவித்துள்ள ‘நமக்கு நாமே’ திட்டம்!

Published On 2022-04-02 11:12 IST   |   Update On 2022-04-02 11:12:00 IST
இந்த திட்டத்திற்காக iFixit எனப்படும் ஆன்லைன் ரிப்பேர் கம்யூனிட்டியுடன் இணைந்து சாம்சங் செயல்படவுள்ளது.
சாம்சங் நிறுவனம் புதிய ‘Self Repair' திட்டத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி  சாம்சங் வாடிக்கையாளர்கள் பழுதடைந்த தங்கள் போனை தாங்களே ரிப்பேர் செய்துகொள்ள முடியும். இதற்கான வழிகாட்டலை சாம்சங்கே வழங்கும்.

இதுகுறித்து சாம்சங் கூறுகையில் இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களின் வாழ்நாளை அவர்களே நீட்டித்துகொள்ள முடியும் என கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக iFixit எனப்படும் ஆன்லைன் ரிப்பேர் கம்யூனிட்டியுடன் இணைந்து சாம்சங் செயல்படவுள்ளது.

இந்த திட்டம் அமெரிக்காவில் மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சாம்சங் ஒருநாள் சர்வீஸ் திட்டத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோன்று வீடு தேடி வந்து ரிப்பேர் செய்யும் சேவையையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களே தங்கள் போனை ரிப்பேர் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த செல்ஃப் ரிப்பேட் திட்டம் கேலக்ஸி எஸ்20 மற்றும் எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும், கேலக்ஸி டேப் எஸ்7+க்கும் மட்டும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் உண்மையான உதிரி பாகங்களுடன், ரிப்பேட் கருவிகள், படக்காட்சிகளுடன் வழிமுறைகள் ஆகியவற்றை பெறுவர்.

இந்த திட்டம் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் அமலுக்கு வரவுள்ளது.

Similar News