தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் பே

நிதி, வங்கி சார்ந்த சேவைகளில் களமிறங்கும் ஆப்பிள்

Published On 2022-04-01 11:30 IST   |   Update On 2022-04-01 11:30:00 IST
கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள், சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால், ஆப்பிளும் தனது வாடிக்கையாளர்களுக்கென நிதி சேவைகளை தொடங்கவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் நிதி சார்ந்த அனைத்து சேவைகளையும் பயனர்களுக்கு வழங்கவுள்ளது. 

தற்போது அமெரிக்காவில் மட்டும் ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து நாடுகளிலும் ஆப்பிளின் நிதி சேவைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரவுள்ளன.

ஆப்பிள் ஏற்கனவே கிரெடிட் கார்ட் மற்றும் பணம் அனுப்பும் சேவை ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வட்டி இல்லாத இ.எம்.ஐ சேவையையும் அறிமுகம் செய்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் அனைத்து நிதி சார்ந்த சேவைகளையும் உள்ளடக்கிய ‘Apple Pay in 4' என்ற சேவையை அமல்படுத்துவதற்காக பணியாற்றி வருகிறது.

தற்போது ஆப்பிளின் ஆப்பிள் பே சேவை மட்டும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது. ஆனால் ஆப்பிள் கார்ட், ஆப்பிள் கேஷ் போன்ற சேவைகள் அமெரிக்காவில் மட்டுமே தற்போது இருந்து வருகின்றன. இவற்றை விரிவுப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதுதவிர பிற வங்கி சார்ந்த செயல்பாடுகளையும் இந்த புதிய ஆப்பிள் சேவையில் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

தற்போது கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள், சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால், ஆப்பிளும் தனது வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக நிதி சேவையை தொடங்கவுள்ளது.

Similar News