தொழில்நுட்பச் செய்திகள்
பிலிப்ஸ்

ரூ.1,399 விலையில் அறிமுகமாகியுள்ள பிலிப்ஸ் இ சீரிஸ் போன்

Published On 2022-03-02 17:31 IST   |   Update On 2022-03-02 17:31:00 IST
இந்த சீரிஸில் பிலிப்ஸ் Xenium E209, பிலிப்ஸ் Xenium E125 மற்றும் பிலிப்ஸ் E102A ஆகிய போன்கள் இடம்பெற்றுள்ளன.
டிவிபி டெக்னாலஜி புதிய பிலிப்ஸ் இ சீரிஸ் ஃபீச்சர் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சீரிஸில் பிலிப்ஸ் Xenium E209, பிலிப்ஸ் Xenium E125 மற்றும் பிலிப்ஸ் E102A ஆகிய போன்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் பிலிப்ஸ் Xenium E209 போனில் 2.4 இன்ச் டிஸ்பிளே, 1000 mAh பேட்டரி, எஸ்.டி கார்ட் ஸ்லாட், ப்ளூடூத் 3.0 கனெக்டிவிட்டி, மீடியாடெக் நியூக்ளியஸ் ரியல்டைம் ஓ.எஸ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.2,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் Xenium E125 போனில் 1.77 இன்ச் டிஸ்பிளே, 2000mAh பேட்டரி, QVGA கேமரா, ப்ரீ இன்ஸ்டால்ட் கேமஸ் மற்றும் இன்பில்ட் மியூசிக் பிளேயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது தவிர ப்ளூடூத் 3.0 கனெக்டிவிட்டி, டூயல் சிம் சப்போர்ட், எக்ஸ்பேண்டபிள் மெமரி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த போனின் விலை ரூ.2,099-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



பிலிப்ஸ் E102A போனில் 1.77 இன்ச் டிஸ்பிளே, 128x160 பிக்ஸல் ரெஷலியூஷன், 1000mAh பேட்டரி, ஜிபிஆர்எஸ் பிரவுசர் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது தவிர இன்பில்ட் வி.ஜி.ஏ கேமரா, எஸ்.டி கார்ட் ஸ்லாட், இன் பில்ட் மியூசிக் பிளேயர், பவர்ஃபுல் ஸ்பீக்கர்ஸ், இன்பில்ட் கேம்ஸ் ஆகியவையும்  இதில் தரப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.1,399-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News