தொழில்நுட்பச் செய்திகள்
வைஃபை 7 தொழில்நுட்பம்

உட்சபட்ச வேகத்துடன் இனி இண்டர்நெட் பயன்படுத்தலாம்...

Published On 2022-02-19 14:06 IST   |   Update On 2022-02-19 14:08:00 IST
வைஃபை 6 தொழில்நுட்பமே இன்னும் பரவலாகாத நிலையில் வைஃபை 7-க்கான பரிசோதனையை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
குவால்காம் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான வைஃபை 7 பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைஃபை 7-ஐ கொண்டு குறைந்த லேட்டன்ஸியில் உட்சபட்ச வேகத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. 

இதேபோன்று மீடியா டெக் நிறுவனம், முதல் சோதனை வைஃபை 7 தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது. தொடக்கம் முதலே வைஃபை 7 தொழில்நுட்ப சோதனையில் ஈடுபட்டு வரும் மீடியா டெக் நிறுவனம் 2023-ம் ஆண்டு முதல் அந்த தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தபோவதாக அறிவித்துள்ளது.

இந்த வைஃபை 7-ன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் தற்போது  வெளியாகியுள்ளன. 



இதன்படி இந்த வைஃபை 7 தொழில்நுட்பம் உட்சபட்ச வேகத்தையும், குறைந்த லேடன்சியையும், நிலையான இணைப்பையும் உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் உள்ள வைஃபை போன்று இல்லாமல் வைஃபை 7, 2.4GHz, 5GHz மற்றும் 6GHz என மூன்று ஃப்ரீக்வன்சி பேண்டுகளை வழங்குகிறது. இதனை நாம் தண்டர்போல்ட் 3 போர்ட் வழங்கும் வேகத்துடன் ஒப்பிட முடியும்.

வைஃபை 7 தொழில்நுட்பம் 3 ஃபிரிக்வன்ஸி பேண்டுகளையும் சிறப்பாக பயன்படுத்தும். ஒரே நேரத்தில் 2 ஃபிரிக்வன்ஸிகளிலும் இயங்ககூடியது. இதன் பேண்ட்வித் 320 MHz வரை விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக வைஃபை 7 மூலம் மெட்டாவெர்ஸ், சோசியல் கேமிங், கிளவுட் கம்ப்யூட்டிங், மெய்நிகர் அனுபவம், தொழிற்சாலைக்கான ஐ.ஓ.டி, வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல பலன்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News