தொழில்நுட்பம்
ஹானர் மேஜிக்புக் லேப்டாப்

ஹானர் மேஜிக்புக் லேப்டாப்கள் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-12-25 05:21 GMT   |   Update On 2019-12-25 05:21 GMT
ஹானர் பிராண்டின் மேஜிக்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு இந்திய கணினி சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹானர் பிராண்டு தனது இரு லேப்டாப் மாடல்களை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

புதிய ஹானர் லேப்டாப்கள் இன்டெல் அல்லது ஏ.எம்.டி. சிப்செட்களை கொண்டிருக்கும் என்றும் இத்துடன் வீகா 10 அல்லது என்விடியா எம்.எக்ஸ்.150 கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன சந்தையில் ஹானர் மேஜிக்புக் லேப்டாப் விண்டோஸ் லேப்டாப் மாடல்களுக்கு மாற்றான மேக்புக் போன்ற சாதனமாக விற்பனை செய்யப்படுகிறது. இவை ஹூவாயின் மேட்புக் சீரிஸ் மாடல்களின் பட்ஜெட் ரக வேரியண்ட்டாக இருக்கிறது. இந்தியாவில் புதிய ஹானர் லேப்டாப்களின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.



எனினும், இவை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. லேப்டாப் மட்டுமின்றி 5ஜி ஸ்மார்ட்போன்கள், ஹானர் விஷன் சீரிஸ் மூலம் டி.வி. சந்தையிலும் களமிறங்குகிறது.

மேலும் ஹூவாய் மீடியா சேவைகளில் கவனம் செலுத்தும் வகையில், ஹானர் பிராண்டு முன்னணி செயலி டெவலப்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூகுள் மொபைல் சேவைகளை நாட வேண்டிய அவசியத்தை பெருமளவு குறைக்க ஹூவாய் திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News