தொழில்நுட்பம்
ட்விட்டர்

ஆண்ட்ராய்டு செயலியை உடனடியாக அப்டேட் செய்யக் கோரும் ட்விட்டர்

Published On 2019-12-23 05:44 GMT   |   Update On 2019-12-23 05:44 GMT
ட்விட்டர் நிறுவனம் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி வரும் தனது வாடிக்கையாளர்களை உடனடியாக செயலியை அப்டேட் செய்ய வலியுறுத்தி வருகிறது.



ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறியீடுகள் உலகம் முழுக்க ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்துவோரின் விவரங்களை கசியவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ட்விட்டர் செயலியில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு பிழை பற்றி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவரவர் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து வருகிறது. இந்த பிழை ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள பிழை ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் அக்கவுண்ட்டினை ஹேக்கர்கள் இயக்க வழி செய்யும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.



இந்த பிழை எவ்வாறு செயலியில் புகுத்தப்பட்டது என்றோ, இதன் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது போன்று எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும், பிழையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

பிழையில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் தங்களின் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது. இந்த பிழை ட்விட்டர் ஐ.ஒ.எஸ். செயலியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News