தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு

Published On 2019-11-19 07:56 GMT   |   Update On 2019-11-19 07:56 GMT
வாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.



வாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனிற்கான வாட்ஸ்அப் செயலி பழைய வெர்ஷன்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹேக்கர்களுக்கு சைபர் தாக்குதல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.

வாட்ஸ்அப் செயலியில் யாரேனும் எம்.பி.4 தரவினை அனுப்பினால் அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். செயலியில் பகிரப்படும் எம்.பி4 தரவினை டவுன்லோடு செய்தால் சாதனத்தில் டிடாஸ் (டினையல் ஆஃப் சர்வீஸ்) தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது. 



இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்ய ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு இருப்பதை உறுதி செய்த ஃபேஸ்புக் இதுபற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தகவல் வழங்கியது. 

இந்த குறைபாடு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.274 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.19.100 வெர்ஷன்களிலும், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பிஸ்னஸ் 2.19.104 மற்றும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஒ.எஸ். 2.19.100 வெர்ஷன்கள் மற்றும் விண்டோஸ் போன் 2.18.368 பதிப்புகளில் இருக்கிறது. புது குறைபாடை கொண்டு ஹேக்கர்கள் பயனர் சாதனத்தில் மால்வேர் மூலம் தகவல்களை திருடவும், உளவு பார்க்கவும் முடியும்.
Tags:    

Similar News