தொழில்நுட்பம்
ஃபேஸ்புக்

கோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் - பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்

Published On 2019-11-15 05:27 GMT   |   Update On 2019-11-15 05:27 GMT
ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கண்டறியப்பட்ட கோடிக்கணக்கான போலி அக்கவுண்ட்களை அந்நிறுவனம் பாரபட்சமின்றி நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இணைய உலகில் போலி செய்திகளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் மும்முரம் காட்டி வருகி்ன்றன. 

அந்த வரிசையில் ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 320 கோடிபோலி அக்கவுண்ட்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் பயனர்களாக மாறும் போது இத்தனை போலி அக்கவுண்ட்கள் கண்டறியப்பட்டது. 

ஆக்டிவ் பயனராகும் முன் கண்டறியப்பட்டதால் இவை ஃபேஸ்புக்கின் வாடிக்கையாளர் கணக்கில் சேராது. தற்போதைய நிலவரப்படி ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் ஐந்து சதவிகிதம் அதாவது சுமார் 240 கோடி அக்கவுண்ட்கள் போலி என ஃபேஸ்புக் கணித்திருக்கிறது.



இதே காலக்கட்டத்தில் போலி அக்கவுண்ட் தவிர குழந்தைகளின் ஆபாசம் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் சார்ந்து சுமார் 1.85 கோடி தரவுகள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அது முந்தைய ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது 13 சதவிகிதம் வரை அதிகம் ஆகும். ஆபாச தரவுகளை கண்டறியும் வழிமுறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இத்துடன் மற்றவரை துன்புறுத்தும் வகையில் பதிவிடப்பட்ட சுமார் 1.14 கோடி தரவுகள் நீக்கப்பட்டிருக்கிறது. பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பகிரப்படும் தரவுகளை நீக்கும் பணிகளில் ஃபேஸ்புக் தொடர்ந்து மும்முரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News