தொழில்நுட்பம்
16 இன்ச் மேக்புக் ப்ரோ

இந்தியாவில் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம்

Published On 2019-11-14 08:36 GMT   |   Update On 2019-11-14 08:36 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் ரெட்டினா டிஸ்ப்ளே, 9 ஆம் தலைமுறை பிராசஸர், அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம், 8000 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 16 இன்ச் ரெட்டினா 3072x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், AMD ரேடியான் ப்ரோ 5000M சீரிஸ் கிராஃபிக்ஸ் மற்றும் GDDR6 வீடியோ மெமரி, 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக 8000 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. முந்தைய மேக்புக் மாடல்களில் இருந்துவந்த கீபோர்டு சார்ந்த பிரச்சனைகள் புதிய மேக்புக் ப்ரோ மாடலில் ஏற்படாத வகையில் புதிய லேப்டாப்களை ஆப்பிள் உருவாக்கி இருக்கிறது.



ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16 இன்ச் சிறப்பம்சங்கள்:

- 16-இன்ச் IPS LED-பேக்லிட் டிஸ்ப்ளே 3072x1920 பிக்சல் ரெசல்யூஷன்
- 6-கோர் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்
- 2.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இருந்து 4.5 ஜிகாஹெர்ட்ஸ் வரை அதிகப்படுத்தும் வசதி
- 8-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர்
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் துவங்கி 4.8 ஜிகாஹெர்ட்ஸ் வரை அதிகப்படுத்தும் வசதி
- அதிகபட்சம் 64 ஜி.பி. DDR4 ரேம்
- அதிகபட்சம் 8000 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
- அதிகபட்சம் AMD ரேடியான் ப்ரோ 5500M கிராஃபிக்ஸ்
- 4 ஜி.பி. GDDR6 மெமரி / இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 630
- ஃபுல்-சைஸ் பேக்லிட் மேஜிக் கீபோர்டு
- வைபை, ப்ளூடூத் 5.0
- 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா
- 4 x தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப்-சி, டிஸ்ப்ளே போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
- 6-ஸ்பீக்கர் சிஸ்டம்
- 100Wh பேட்டரி
- 96W யு.எஸ்.பி.-சி பவர் அடாப்டர்
- மேக் ஓ.எஸ். கேட்டலினா

புதிய ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16 இன்ச் 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 199,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News