தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை

Published On 2019-11-12 05:57 GMT   |   Update On 2019-11-12 05:57 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 997 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. 180 நாட்கள் வேலி்டிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

தற்சமயம் இந்த பிரீபெயிட் சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் இந்த சலுகையில் டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் குறையும். 

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை பி.எஸ்.என்.எல். எண்களில் இருந்து அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., முதல் இரு மாதங்களுக்கு பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது.



ஏர்டெல் நிறுவனமும் ரூ. 998 விலையில் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. 336 நாட்கள் வேலி்டிட்டி கொண்டிருக்கும் ரூ. 998 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 12 ஜி.பி. டேட்டா எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 999 பிரீபெயிட் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 999 சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் 60 ஜி.பி. டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News