தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரியாக வைக்கலாம்

Published On 2019-09-21 05:46 GMT   |   Update On 2019-09-21 05:46 GMT
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரியாக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.



வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்த அம்சம் தற்சமயம் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் வைத்துக் கொள்ள "Share to Facebook Story" எனும் பட்டன் வழங்கப்படுகிறது. இது வாடஸ்அப் ஸ்டேட்டஸ் டேப் அருகிலேயே காணப்படுகிறது. புதிய அம்சத்திற்கு முழுமையான என்க்ரிப்ஷன் பொருந்தாது என கூறப்படுகிறது.



ஸ்டேட்டஸ் அப்டேட்களை மற்ற செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படாது. ஸ்டேட்டஸ் அப்டேட் வைக்கும் போது, வாட்ஸ்அப் அக்கவுண்ட் விவரங்களை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.258 மற்றும் ஐபோனிற்கான வாட்ஸ்அப் 2.19.92 பதிப்புகளில் புதிய வசதி வழங்கப்படுகிறது. இரு பதிப்புகளும் அந்தந்த ஆப் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 

Tags:    

Similar News