தொழில்நுட்பம்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5

புத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்

Published On 2019-09-11 03:00 GMT   |   Update On 2019-09-11 03:00 GMT
ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் புத்தம் புதிய அம்சங்கள் நிறைந்த 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டன.



ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் கேமிங், டி.வி. பிளஸ் சேவைகளுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்தது. இரு சாதனங்களிலும் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.



ஐபேட் 10.2 இன்ச் சிறப்பம்சங்கள்:

- 10.2 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் மல்டி-டச் டிஸ்ப்ளே
- ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட்
- ஆப்பிள் பென்சில் வசதி (முதல் தலைமுறை மாடல்)
- 8 எம்.பி. கேமரா, f/2.4
- 1.2 எம்.பி. கேமரா, f/2.2
- வைபை, ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன்
- 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
- ஐபேட் ஒ.எஸ்.

புதிய ஐபேட் 10.2 இன்ச் 32 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 40,900 முதல் துவங்குகிறது. புதிய ஐபேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.



ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5:

புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 மாடலின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. 

இத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஜி.பி.எஸ். மாடல் விலை ரூ. 40,990 என்றும் செல்லுலார் மாடலுக்கு ரூ. 49,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News