தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

நாள் ஒன்றுக்கு 33 ஜி.பி. டேட்டா - ஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல்.

Published On 2019-09-09 07:30 GMT   |   Update On 2019-09-09 07:30 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 33 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.



பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சலுகை ரூ. 1999 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 33 ஜி.பி. டேட்டா, நாடு முழுக்க கிடைக்கும் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது.

இச்சலுகையில் டேட்டா வேகம் 100Mbps ஆக இருக்கிறது. இது ஏர்டெல் வி ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் வழங்கும் 250Mbps வேகத்தை விட குறைவு ஆகும். தினசரி டேட்டா அளவு கடந்ததும், டேட்டா வேகம் 4Mbps ஆக குறைக்கப்படும். புதிய சலுகை பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விரைவில் மாற்றப்படும் என தெரிகிறது.



பிராட்பேண்ட் சலுகையில் தினசரி டேட்டா அளவு 33 ஜி.பி.யாக இருக்கிறது. இதன் வேகம் 100Mbps ஆகும். தினசரி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 4Mbps ஆக குறைக்கப்பட்டுவிடும். ரூ. 1999 சலுகை தவிர ரூ. 1,277 சலுகையில் பயனர்களுக்கு 750 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். ரூ. 2,499 சலுகையில் தினமும் 40 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ. 4,499 மற்றும் ரூ. 5,999 சலுகைகளில் பயனர்களுக்கு முறையே 55 ஜி.பி. மற்றும் 80 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகின்றன. ரூ. 9,999 சலுகையிலும் 100Mbps வேகத்தில் தினமும் 120 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 8Mbps ஆக குறைக்கப்படுகிறது.
Tags:    

Similar News