தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தைியல் புதிய மைல்கல் - தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

Published On 2019-07-28 04:22 GMT   |   Update On 2019-07-28 04:22 GMT
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய மைல்கல் கடந்து தொடர்ந்து அசத்தி வருகிறது.



இந்திய டெலிகாம் சந்தையில் வணிக ரீதியிலான சேவைகளை துவங்கி வெறும் மூன்றே ஆண்டுகளில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது.

ஜூன் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33.13 கோடியாக இருக்கிறது. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32 கோடியாக இருக்கிறது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33.13 கோடி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது இடம்பிடித்தது.



2019-20 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32 கோடியாக குறைந்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 33.41 கோடியாக இருந்தது.

வோடபோன் ஐடியா நிறுவனங்கள் டெலிகாம் சேவை வியாபாரத்தை ஒன்றிணைத்த போது, இந்நிறுவனம் சுமார் 40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக மாறியது. எனினும், இந்நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
Tags:    

Similar News