தொழில்நுட்பம்
ஆப்பிள் புதிய எமோஜி

உலக எமோஜி தினத்தில் ஆப்பிள் புதிய எமோஜிக்கள் அறிமுகம்

Published On 2019-07-18 04:51 GMT   |   Update On 2019-07-18 04:51 GMT
ஆப்பிள் நிறுவனம் சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில், புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்தது.



ஆப்பிள் நிறுவனம் சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில், 60-க்கும் அதிகமான எமோஜிக்களை அறிமுகம் செய்தது. புதிய எமோஜிக்கள் அந்நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய எமோஜிக்கள் யுனிகோட் 12.0 சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதி இந்த ஆண்டு துவக்கத்தில் வழங்கப்பட்டது. புதிய எமோஜிக்களில் காது கேட்க செய்யும் கருவி, வீல்சேர், செயற்கை கை, செயற்கை கால் உள்ளிட்டவை பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

உணவு, விலங்குகள், நடவடிக்கைகள் மற்றும் ஸ்மைலி ஃபேஸ் உள்ளிட்டவை புதிய எமோஜிக்களில் பிரபலமானவைகளாக இருக்கின்றன. கைகள் கோர்த்தப்படி இருக்கும் எமோஜி ஜோடிகள் மற்றும் உறவுமுறையை குறிக்கும் வகையில் இருந்தது. 



இந்நிலையில், இனி சரும நிறம், பராலினம் உள்ளிட்டவை என மொத்தம் 75 விதங்களில் கிடைக்கும் எமோஜிக்களில் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இந்த பட்டியலில் புடவை, நீச்சல் உடை, புதிய உணவு வகைகள், விலங்குகள் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 59 புதிய எமோஜிக்கள் இலவச மென்பொருள் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. 

ஐபோன், ஐபேட், மேக் மற்றும் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தங்களின் மென்பொருளை அப்டேட் செய்து இவற்றை பயன்படுத்த துவங்கலாம். 
Tags:    

Similar News