தொழில்நுட்பம்
டி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி.

இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்

Published On 2019-07-17 05:47 GMT   |   Update On 2019-07-17 05:47 GMT
டி.சி.எல். நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.



டி.சி.எல். நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்தது. புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெசல் லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

டி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி.யில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் குறிப்பிட்ட எல்லைக்குள் பயனர்களின் குரல் கமாண்ட்களை ஏற்று இயங்கும் வசதியை கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் டி.வி.யை ஆன்-ஆஃப் செய்வது முதல், சேனல்களை மாற்றுவதற்கு குரல் வழி கமாண்ட்களை பயன்படுத்தினால் போதும்.

இதுதவிர இந்த தொழில்நுட்பம் மற்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. இதனால், அவற்றையும் மிக எளிமையாக இயக்க முடியும். ரோபோட் ஸ்வீப்பர்கள், கர்டெயின்கள், லைட்கள் மற்றும் இதர ஸ்மார்ட் சாதனங்களை குரல்வழியே இயக்கலாம்.

இதன் ஏ.ஐ. தொழில்நுட்பம் பின்னணியில் சத்தமில்லாமல் இயங்கி திரையின் பிரைட்னஸ், காண்டிராஸ்ட் மற்றும் சாட்யூரேஷன் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும். இத்துடன் சிக்னல் தரத்தை மேம்படுத்தி, ஸ்பீக்கர்களில் இருந்து தெளிவான சத்தம் சீராக வழங்க இந்த ஏ.ஐ. வழிசெய்யும்.



இது ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. ஆகும். பயனர்கள் புதிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், கேம் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே, யூடியூப் மற்றும் இதர செயலிகளில் இருந்து பயன்படுத்த முடியும். இந்த டி.வி.யில் அலெக்சா சேவையையும் பயன்படுத்தலாம்.

இத்துடன் இரோஸ் நௌ, ஜீ5, ஹாட்ஸ்டார், வூட், ஜியோ சினிமா, ஹங்காமா பிளே, ஆல்ட்பாலாஜி மற்றும் யுப் டி.வி. போன்ற சேவைகளையும் இந்த டி.வி.யில் இயக்கலாம். ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை P8E சீரிஸ் டி.வி.யில் குவாட்கோர் சி.பி.யு. மூன்று கோர் 600-800 MHz PGU, 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை வழங்க ஹெச்.டி.எம்.ஐ. 2.0, யு.எஸ்.பி. 2.0, வைபை 2.4 ஜி மற்றும் ப்ளூடூத் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி. விலை ரூ. 40,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News