தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் லோகோ

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் கியூ.ஆர். கோட் அம்சம்

Published On 2019-07-03 06:17 GMT   |   Update On 2019-07-03 06:17 GMT
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிதாக கியூ.ஆர். கோட் ஷார்ட்கட் அம்சம் வழங்குவதற்கான சோதனை நடைபெறுகிறது.



வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது, காண்டாக்ட் ரேங்கிங் போன்ற அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், வாட்ஸ்அப்  செயலியில் கியூ.ஆர். கோட் ஸ்கேனர் வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாக இந்த ஆண்டு மே மாதத்திலும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதிய கியூ.ஆர். கோட் ஸ்கேனர் மூலம் பயனர்கள் அவரவர் காண்டாக்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.19.189 பதிப்பில் வழங்கப்படுகிறது.



தற்சமயம் இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்படவில்லை. எதி்ர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம். இன்ஸ்டாகிராம் செயலியில் யூசர்நேம் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் கியூ.ஆர். கோட் அம்சங்களை போன்று புதிய அம்சமும் இயங்கும் என தெரிகிறது.

புதிய அம்சம் ஷார்ட்கட் முறையில் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை க்ளிக் செய்து ஸ்கேன் மற்றும் ஷேர் செய்ய துவங்கலாம். முன்னதாக வெளியான தகவல்களில் வாட்ஸ்அப் கியூ.ஆர். கோட் உறுதி செய்யப்பட்டதும், செயலி காண்டாக்ட் விவரங்களை தானாக பதிவு செய்யத் துவங்கும் என கூறப்பட்டது.

புகைப்படம் நன்றி: WABetaInfo
Tags:    

Similar News