தொழில்நுட்பம்
அமேஸ்ஃபிட் பிப் லைட்

இந்தியாவில் அமேஸ்ஃபிட் பிப் லைட் ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் அறிமுகம்

Published On 2019-06-30 07:35 GMT   |   Update On 2019-06-30 07:35 GMT
இந்தியாவில் ஹூவாமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஹூவாமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேஸ்ஃபிட் சீசிரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அமேஸ்ஃபிட் பிப் லைட் என அழைக்கப்படுகிறது. 

இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த அமேஸ்ஃபிட் பிப் சாதனத்தின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலில் மல்டி-ஸ்போர்ட் டிராக்கிங், இதய துடிப்பு சென்சார், பில்ட்-இன் ஜி.பி.எஸ். போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.28 இன்ச் 176×176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

அமேஸ்ஃபிட் பிப் லைட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இது புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.



அமேஸ்ஃபிட் பிப் லைட் அம்சங்கள்:

– 1.28 இன்ச் 176×176 பிக்சல் கலர் ஆல்வேஸ் ஆன் ரிஃப்லெக்டிவ் டச் டிஸ்ப்ளே
– 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல்களுக்கு நோட்டிஃபிகேஷன் வசதி
– மல்டி-ஸ்போர்ட் டிராக்கிங்
– ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
– ப்ளூடூத் 4.0 எல்.இ. – ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வசதி
– 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஏர் பிர்ஷர் சென்சார்
– 20 எம்.எம். ஸ்டான்டர்டு விட்த் மாற்றக்கூடிய வாட்ச் பேண்ட்
– வாட்டர், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP68)
– 190 எம்.ஏ.ஹெச். லி-பாலிமர் பேட்டரி

இந்தியாவில் புதிய அமேஸ்ஃபிட் பிப் லைட் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் அடுத்த மாதம் துவங்குகிறது.

Tags:    

Similar News