தொழில்நுட்பம்

அசத்தல் அம்சங்களுடன் சோனி வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-06-23 09:38 GMT   |   Update On 2019-06-23 09:38 GMT
சோனி நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.



சோனி இந்தியா நிறுவனத்தின் இரண்டு வயர்லெஸ் நெக்பேண்ட் ரக இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல்கள் சோனி WI-C310 மற்றும் WI-C200 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கின்றன. இரண்டு இயர்போன்களும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கின்றன.

புதிய இயர்போன்களில் பிளாஸ்டிக் நெக்பேண்டிற்கு மாற்றாக இரண்டு இயர்பட்களை இணைக்க வெறும் வையர் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இயர்போன்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என சோனி தெரிவித்துள்ளது.

சோனி WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்கள் வெறும் 15 கிராம் எடை கொண்டிருக்கிறது. நெக்பேண்ட் இல்லாததால் இரு ஹெட்போன்களின் எடையும் மிக குறைவாக இருக்கிறது. இதனால் இசையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் கேட்டு ரசிக்கலாம். இரு இயர்போன்களும் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வசதியும் குவிக் சார்ஜ் வசதியும் கொண்டிருக்கிறது.



பேட்டரி குறையும் போது இயர்போன்களை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். இரண்டு இயர்போன்களிலும் சோனி யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கியிருக்கிறது. இதனால் சார்ஜிங் செய்வது மிக எளிமையாக இருக்கிறது. சோனியின் WI-C310 மற்றும் WI-C200 என இரண்டு இயர்போன்களிலும் 9 எம்.எம். டிரைவர் யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த இயர்பட்கள் காந்த சக்தி பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் இயர்பட்கள் பயன்படுத்தாத நிலையில் தானாக இணைந்து கொள்கிறது. இவை இயர்பட்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டு இயர்போன்களிலும் மூன்று பட்டன்களுடன் இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் மத்தியில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவைகளை இயக்கலாம். இந்தியாவில் சோனி WI-C310 இயர்போனின் விலை ரூ.2,990 என்றும் WI-C200 இயர்போனின் விலை ரூ.2,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News