தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் பிரைவசி செட்டிங் மாற்றம்

Published On 2019-04-03 10:02 GMT   |   Update On 2019-04-03 10:02 GMT
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி செட்டிங் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் க்ரூப்களில் சேர்வதை அவரவர் தானாக முடிவு செய்து கொள்ளலாம். #WhatsApp



வாட்ஸ்அப் செயலியில் சமீப காலங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் பயன்பாடு மிகமுக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், தற்சமயம் இதன் பிரைவசி செட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி புதிய செட்டிங்களை செயல்படுத்தும் போது யார் உங்களை க்ரூப்களில் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். இதனை செயல்படுத்த அக்கவுண்ட் -- பிரைவசி -- க்ரூப்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து நோபடி (Nobody), மை காண்டாக்ட்ஸ் (My Contacts) அல்லது எவ்ரிவொன் (Everyone) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.



இவற்றில் நோபடி ஆப்ஷனை தேர்வு செய்யும் போது நீங்கள் இணைக்கப்படும் க்ரூப்களில் நீங்கள் அனுமதியளித்தால் சேர்ந்து கொள்ளலாம். மை காண்டாக்ட்ஸ் ஆப்ஷன் உங்களது காண்டாக்ட்களில் இருப்பவர் மட்டுமே உங்களை க்ரூப்களில் சேர்க்கும் வசதியை வழங்கும்.

இதுபோன்ற சமயங்களில் உங்களை க்ரூப்பில் சேர்க்க முயன்றவருக்கு, தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கக் கோரப்படும். பயனருக்கு வரும் இன்வைட்களுக்கு பதில் அளிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பின் இன்வைட் காலாவதியாகிவிடும்.

புதிய அம்சங்களின் மூலம் பயனர் அவர்களுக்கு வரும் க்ரூப் மெசேஞ்களை கட்டுக்குள் வைக்க முடியும். புதிய பிரவைசி செட்டிங் சில பயனர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்றும் உலகம் முழுக்க வரும் வாரங்களில் படிப்படியாக வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News