தொழில்நுட்பம்

விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் டாக்டர் மேரியோ வொர்ல்டு கேம்

Published On 2019-02-01 15:44 IST   |   Update On 2019-02-01 15:44:00 IST
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் டாக்டர் மேரியோ வொர்ல்டு கேம் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. #Nintendo #DrMarioWorld



நின்டென்டோ மற்றும் லைன் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் சாதனங்களுக்கென புதிய கேமினை உருவாக்க இருக்கின்றன. அந்த வகையில் நின்டென்டோ மற்றும் லைன் நிறுவனங்கள் இணைந்து டாக்டர் மேரியோ என்ற கேமினை உருவாக்குகின்றன.

புதிய கேமினை இருநிறுவனங்களும் இந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. முதற்கட்டமாக இந்த கேம் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அறிமுகமாக இருக்கின்றது. 

முன்னதாக பல்வேறு ஆன்லைன் மற்றும் மொபைல் கேம்களை உருவாக்கி அவற்றை இயக்கி வந்த நின்டென்டோ மற்றும் லைன் கார்ப்பரேஷன் புதிய டாக்டர் மேரியோ வொர்ல்டு கேமினை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றன. 



ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இலவசமாக டவுன்லோடு செய்யக்கூடியதாக டாக்டர் மேரியோ வொர்ல்டு கேம் இருக்கும். முற்றிலும் இலவசமாக வழங்கமுடியாது என்பதால் செயலியில் காசு கொடுத்த வாங்க வேண்டியதாக சில அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. 

முதற்கட்டமாக ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்றாலும் உலகம் முழுக்க சுமார் 60 நாடுகளில் டாக்டர் மேரியோ கேம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Similar News